Tuesday, March 01, 2005

தவமுனிவர்கள்

வலையில் தங்கள் கலையை சொல்லும் கலைஞர்களுக்கும்
வலையில் நித்தம் வலய வரும் வலைஞர்களுக்கம்
நிலையா மானுடத்தை நெகிழவைக்கும் வல்லுனர்களுக்கும்
மின்வலையை பொன்வலையாக்கும் நல்லவர்களுக்கும்
அம்பரனின் அன்பான வணக்கங்கள்.............................

சென்றகாலத்தின் பழுதிலா திறமும் எதிர்காலத்தின் சிறப்பும்என்கிற பாட்டின்மூலம் சென்ற காலம்செழுமையகவே இருந்தது என்பது தெரிய வருகிறது.எதிர்காலத்தின் சிறப்பு என்பது நமது தற்போதைய நிகழ்காலத்தில் தான் உள்ளது.ராஜ ராஜ சோழனை நாம் கண்டதில்லை.ஆனால்
அவன் கல்லால் எழுப்பிய தஞ்ஜை பெரியகொவில்காலங்களை கடந்து அந்த சோழனின் பக்திபெருமையை பறைசாற்றிக்கொண்டிருகிறது.அதைப்போல் மின்வலையில் நல்ல உள்ளங்கள் சொல்லால் படைக்கும் இந்த காவியங்களும் எதிர்காலத்தில் நிகழ்காலத்தின் நிதிர்சனத்தை
நிச்சயமாக நிலைநிறுத்தும் என்பதில் ஐயமில்லை.முன் காலத்தில் வாழ்ந்த ரிஷிகளையும் அவர்களுடைய கோத்திரங்களையும்கோத்திரப்ரவரங்களையும் எடுத்து இயம்ப தமிழ்வலையில் தடம் பதிக்கின்றேன். தயைகூர்ந்து வாழ்த்துங்கள், தவறேதும் இருந்தால் தூது சொல்லுங்கள்

ஏழுவகையான ரிஷிகளே முன்னவர்கள்
1 ப்ருகு
2 அங்கிரசர்
3 அத்ரி
4 விஸ்வாமித்ரர்
5 வஸிஷ்டர்
6 கஸ்யபர்
7 அகஸ்த்யர்

முதலில் ப்ருகு கோத்திரத்தில் உண்டான கோத்திரங்களின் பெயர்களும் ப்ரவரங்களையும் காண்போம்

ஜமதக்னி, ஜாபாலி ,
ஜைமினி , கார்க்ய
கோத்திரங்களின் ப்ரவரம்
பார்கவ வைதஹவ்ய ரைவச
ஜாமதக்னிய, பௌலஸ்த்ய , மாண்டூகேய
கோத்திரங்களின் ப்ரவரம்
பார்கவ ஔர்வ ஜாமதக்னிய
வாதூல கஸ்யபி
கோத்திரங்களின் ப்ரவரம்
பார்கவ வைதஹவ்ய ஸாவேதஸ
அவட கோத்திர ப்ரவரம்

பார்கவ ஔர்வ ஜாமதக்னிய
மௌனபார்கவகோத்திர ப்ரவரம்

பார்கவ வைதஹவ்ய ஸாவேதஸ
ஸ்ரீவத்ஸகோத்திர ப்ரவரம்
பார்கவ ச்யாவன ஆப்னவான ஔர்வ ஜாமதக்னிய
கார்த்ஸமத கோத்திர ப்ரவரம்
(க்ருத்ஸமத) பார்கவ கார்த்ஸமத
சுனககோத்திர ப்ரவரம்

பார்கவ கார்த்ஸமத
யஞபதிகோத்திர ப்ரவரம்

பார்கவ கார்த்ஸமத
ஆர்ஷ்டிஷேன கோத்திர ப்ரவரம்

பார்கவ ஆர்ஷ்டிஷேன ஆனூப
ஆச்வலாயனகோத்திர ப்ரவரம்

பார்கவ வாத்யஸ்வ தைவதாஸ
காத்யாயன கோத்திர ப்ரவரம்

பார்கவ ஆர்ஷ்டிஷேன ஆனூப
க்ருத்ஸகத கோத்திர ப்ரவரம்

பார்கவ சௌனஹோத்ர கார்த்ஸமத
(கார்த்ஸமத)
நைருதி
கோத்திர ப்ரவரம்

பார்கவ ஆர்ஷ்டிஷேன ஆனூப

ஆங்கீரச ரிஷியின் உண்டான ப்ரவரங்களை
அடுத்த முறை காண்போம்

0 Comments:

Post a Comment

<< Home